லட்சியம் முக்கியமா, காதல் முக்கியமா? — இன்றைய இளைஞர்களின் நிஜப் போராட்டம்! | "நினைவு இருக்கும் வரை"
நண்பர்களே, இன்றைய டிஜிட்டல் உலகில் காதலிப்பது எளிது, ஆனால் அந்த காதலைக் காப்பாற்றிக் கொள்வது? அது ஒரு பெரிய கலை!
K24 தமிழ் டிவி மற்றும் DK ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதன் குமார்.B இயக்கத்தில் உருவாகியுள்ள ஒரு எதார்த்தமான காதல் மற்றும் குடும்பத் தொடர் தான் இந்த "நினைவு இருக்கும் வரை".
ஒரு பக்கம் யூடியூப் (YouTube) சேனலை வெற்றிகரமாக நடத்தத் துடிக்கும் ஒரு இளைஞன் (பரத்)... இன்னொரு பக்கம் சொந்த பந்தங்களின் கட்டாயத் திருமண நெருக்கடியில் தவிக்கும் ஒரு பெண் (நிகாரிகா)... இவர்களுக்குள் இருக்கும் காதல் என்னவாகப் போகிறது?
"எல்லாருக்கும் லவ்ல காம்ப்ளிகேஷன் இருக்கலாம், ஆனா காம்ப்ளிகேஷன்லயே லவ் இருந்தா அதாங்க என் வாழ்க்கை!" - இந்த எபிசோடில் வரும் இந்த ஒரு வசனமே ஒட்டுமொத்த கதையின் ஆழத்தையும் நமக்கு உணர்த்திவிடுகிறது.
இவர்களின் காதல் ஒன்று சேர்ந்ததா? அல்லது நினைவுகளாக மட்டுமே எஞ்சியதா? "நினைவு இருக்கும் வரை" தொடரின் நெஞ்சை நெகிழ வைக்கும் சுவாரசியமான காட்சிகள்..
பரத் கையில் பணமில்லாத சூழ்நிலையிலும் தன் காதலிக்காக ஓடி வருகிறானா? குடும்பத்தின் பிடிவாதத்தை நிகாரிகா எப்படி எதிர்கொள்கிறாள்? எதார்த்தமான வசனங்கள், அழகான பின்னணி இசை என உங்களை அப்படியே கதைக்குள் இழுத்துச் செல்லும் 6 எபிசோடுகளும் இதோ கீழே உங்களுக்காக!

