பிரிந்து சென்ற காதலர்கள் தற்செயலாக மீண்டும் ஒருமுறை நேரில் சந்தித்துக் கொண்டால் அந்த நொடி எப்படி இருக்கும்? பழைய நினைவுகளும், கடந்து வந்த பாதையும் மனக்கண்ணில் வந்து போவதை மிக ஆழமான உணர்வுகளுடன் பேசுகிறது K24 தமிழ் டிவியின் "முன்னாள் காதலி" (Munnal Kadhali) குறும் படம்.
ஒரு ராபிடோ/டாக்ஸி பயணத்தில் எதிர்பாராத விதமாகத் தனது முன்னாள் காதலியைச் சந்திக்கும் நாயகன், அவளுக்குத் தன் மனதில் இருக்கும் காதலைச் சொல்லத் தவிக்கிறான்.
"நமக்குள் செட்டே ஆகாது, இனி என் லைஃப்ல உன்னை பார்க்கவே கூடாது" என்று பிரிந்து சென்றவளின் பிறந்தநாளை இன்றும் அவன் நினைவில் வைத்திருக்கிறான்.
"மேபி கடவுள் நமக்குக் கொடுத்த செகண்ட் சான்ஸோ?" என்று நினைத்து தன் மன பாரத்தைக் கொட்ட நினைக்கும் வேளையில் , பின்னணியில் ஒலிக்கும் "சூரியன் மறைந்தால் மின்னல்கள் வருமா..." போன்ற மெலோடி வரிகள் பார்ப்பவர்களின் கண்களைக் குளிர வைக்கின்றன .
பிரிவின் வலியையும், மாறாத காதலின் அழகையும் அழகிய இசையுடன் விவரிக்கும் ஒரு எதார்த்தமான காதல் படைப்பு இது!

