"வீட்ல யாரும் இல்லை... உடனே வா!" காதலி கூப்பிட்ட நள்ளிரவு சர்ப்ரைஸ்! K24 தமிழ் டிவியின் "The Night She Called" புதிய லவ் ஷார்ட் ஃபிலிம்.

 


காதலிக்கும் போது, காதலி திடீரென போன் செய்து "வீட்டில் யாரும் இல்லை, ஃப்ரீயாக இருந்தால் வந்து பாருங்கள்" என்று அழைத்தால் எந்த ஒரு காதலனுக்கும் ஏற்படும் அந்த சந்தோஷமே தனி. அந்த ஒரு க்யூட்டான, சுவாரசியமான தருணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள குறும் படம் தான் K24 தமிழ் டிவியின் "The Night She Called".



வேலை முடிந்து வீடு திரும்பும் நாயகனுக்கு, அவனது காதலி நிகாரிகாவிடமிருந்து ஒரு எதிர்பாராத போன் கால் வருகிறது . வீட்டில் யாரும் இல்லை என்று தெரிந்ததும், அரை மணி நேரத்தில் அவள் வீட்டு வாசலில் வந்து நிற்கிறான்.  பாட்டி வீட்டில் இருப்பதாகக் கூறி முதலில் பயமுறுத்தும் காதலி , பிறகு அவனுக்கு காபி போட்டுக் கொடுத்து, தன் சிறுவயது ஆல்பத்தைக் காட்டும் காட்சிகள் மிகவும் எதார்த்தமாகவும் க்யூட்டாகவும் படமாக்கப்பட்டுள்ளன. "அடுத்து நம்ம நிச்சயதார்த்தம் தான்" என்று காதலன் வம்பிழுப்பதும், அதற்கு காதலி வெட்கப்படுவதும் என இன்றைய இளைஞர்களின் மாடர்ன் காதலை அழகாக விவரிக்கிறது இந்த குறும்படம் .

🌟 Cast & Crew

Production : DK Films Producer : Dr. R. Dhakshayani Kumar Director : Madan Kumar.B Music : Manigandan Editor : Sarathi DI : Arun Cinematography : Moses 🌟 Starring (நடிப்பு) Manigandan .B
Jessika


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.